Thursday, March 18, 2010

துடிப்பு

கூடத்தின் நடுவே நானிருந்தும்

உன் குரலை தேடுகிறேன்

கை நடுவில் இருக்கும் தொலைபேசியில்

Friday, March 5, 2010

பெண்கள் தினம் 2011

பெண்களின் உயர்வு கீழ்படியில் இருக்க
ஏணிப்படிகளை தேடுவது எதற்கு
ஊர் குருவி நீ
பிறர் கேளிகளுக்காக
உன் திறமைகளை உல் அடக்குவது எதற்கு
தலை நிமிர்ந்து பார்
தலைவன் மட்டும்மல்ல
தலைவி என்ற வரத்தையும் தலை நிமிர்ந்து நிற்கும்
விழுக்காடுகள் வேண்டாம்
உன் சாதனை விழுதுகளை குடு
என பெண்களும் உயர்ந்து நிற்க

Tuesday, January 12, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

குலவை கொட்டி கும்மி அடிச்சு

ஊரு சனத்தையே கூட்டி

சொந்த பந்ததொட விருந்து வெச்சு

பலச எரிச்சுட்டு புது துணி போட்டு

எங்க எங்கயோ வேலை பாக்கற

வெட்டருவா மீசை பசங்களும்

எப்பவாவது வெக்க படர பொண்ணுகளும்

விட்டு போன அத்தை பொண்ணும்

மாமன் மகனும் சந்திசுகிட

சந்தோசம் பொங்கி ஆனந்த கூச்சலோட

பிறக்கட்டும் தை திருமகளின் நாட்டியம்

நம்ம ஊரு மக்கா எல்லாருக்கும்

வாழ்த்துகள்

சுதா