குலவை கொட்டி கும்மி அடிச்சு
ஊரு சனத்தையே கூட்டி
சொந்த பந்ததொட விருந்து வெச்சு
பலச எரிச்சுட்டு புது துணி போட்டு
எங்க எங்கயோ வேலை பாக்கற
வெட்டருவா மீசை பசங்களும்
எப்பவாவது வெக்க படர பொண்ணுகளும்
விட்டு போன அத்தை பொண்ணும்
மாமன் மகனும் சந்திசுகிட
சந்தோசம் பொங்கி ஆனந்த கூச்சலோட
பிறக்கட்டும் தை திருமகளின் நாட்டியம்
நம்ம ஊரு மக்கா எல்லாருக்கும்
வாழ்த்துகள்
சுதா