பெண்குலம் என்பது
கற்பனைகளின் சொந்தக்காரியா??
தேசாந்திரம் சென்ற
கணவனுக்காக சீதையாகி
தப்பிதம் செய்கின்ற
பிள்ளைக்கும் யசோதையாகி
உழைப்பின் இமயத்தில்
பணித்த நீர்துளியாகி
கடவுளையும் மன்னுகிரக்கி
மழலை சிந்தும் குழந்தையாக்கி
ஓடவிட்டு வஞ்சயோடுவீசும்
மேன்மைக்குவியலின் சொந்தக்காரியா??
முட்டிக்கொண்டு முன்னேறும் இவ்வுலகில்
இவள் உங்களுக்கு இட்டுகொடுத்து
கன்னமூலங்களில் வடிந்த
கண்ணீர் லயத்தில் சங்கமிக்கின்றவள்
எங்கள் பெண்களை
கைகூப்பி வாங்காவிட்டாலும்
கரைசெர்த்துவிடு உலகமே