Thursday, March 18, 2010

துடிப்பு

கூடத்தின் நடுவே நானிருந்தும்

உன் குரலை தேடுகிறேன்

கை நடுவில் இருக்கும் தொலைபேசியில்

Friday, March 5, 2010

பெண்கள் தினம் 2011

பெண்களின் உயர்வு கீழ்படியில் இருக்க
ஏணிப்படிகளை தேடுவது எதற்கு
ஊர் குருவி நீ
பிறர் கேளிகளுக்காக
உன் திறமைகளை உல் அடக்குவது எதற்கு
தலை நிமிர்ந்து பார்
தலைவன் மட்டும்மல்ல
தலைவி என்ற வரத்தையும் தலை நிமிர்ந்து நிற்கும்
விழுக்காடுகள் வேண்டாம்
உன் சாதனை விழுதுகளை குடு
என பெண்களும் உயர்ந்து நிற்க

Tuesday, January 12, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

குலவை கொட்டி கும்மி அடிச்சு

ஊரு சனத்தையே கூட்டி

சொந்த பந்ததொட விருந்து வெச்சு

பலச எரிச்சுட்டு புது துணி போட்டு

எங்க எங்கயோ வேலை பாக்கற

வெட்டருவா மீசை பசங்களும்

எப்பவாவது வெக்க படர பொண்ணுகளும்

விட்டு போன அத்தை பொண்ணும்

மாமன் மகனும் சந்திசுகிட

சந்தோசம் பொங்கி ஆனந்த கூச்சலோட

பிறக்கட்டும் தை திருமகளின் நாட்டியம்

நம்ம ஊரு மக்கா எல்லாருக்கும்

வாழ்த்துகள்

சுதா



Wednesday, December 30, 2009

தினமும்........................



எங்கு சென்றாலும் தலை குனிந்தே நடக்கிறேன்

என் கண்ணீரை எவரும் பார்த்து விட கூடாதென

எங்கு சென்றாலும் தலை குனிந்தே நடக்கிறேன்

பரிணாமம்



விடியலை மறுக்கிறேன்

உன்னிடம் பேச


மாலை நேரம் மட்டுமே இருப்பதால்

Thursday, September 17, 2009

ராயல் வோமேன்ஸ் ஹோச்டேல் லூட்டி

அழகிய நாட்கள்

பெண்கள் விடுதியில்

என்றும் எங்கள் கும்மாளம்

ஒரு துணி வாங்க

மணிகனககாய் அடுக்கு மாடி கடையில்

பல துணிகளின் அணிவக்குப்பு நடத்தி

உலக அழகிகள் என ஒரு உலா

பாரதி கண்ட பெண்மணிகள் என

ஊர் சுற்றி விட்டு

பதினோரு மணிக்கு கடையில்

முடித்த இரவு நேர சாப்பாடு

சுற்றிய களைப்பு வாட்டினாலும்

விடுதி வந்து சேரும் வரை

தெரு நெடுக்க அடித்த கும்மாளம்

காந்தி கண்ட புதுமை பெண்கள என

இருந்து விட்ட பெருமை

பக்கத்து கட்டில் தோழிஇன்

நண்பனிடம் அடித்த அழகான அரட்டை

விடுமுரைஇன் அட்டகாசதிஇல்

திங்கட்கிழமை வேலைஇல் தூங்கி

மேலதிகரிஇடம் சொல்லிய

சமாளிப்பு பொய்கள்

என்றாவது ஒருவருக்காக வரும்

பிறந்த நாளுக்காக மாத

துவக்கத்தின் சம்பள நாளில்

போட்ட துண்டு பட்ஜெட்

வரவு செலவு கணக்குகள்

விட்டரிடம் சீதைகளாய்

விடுதியில் ராதை களாய்

கொட்டமடிதாலும் கடைசியில்

" மச்சி இந்த சந்தோசம் எல்லாம்

கல்யாணம் ஆகுற வரை தானேடி"


ரெண்டு/முன்று

மூன்று உலகம்

முத் தமிழ்

முன்று காலம்

ஆனால் என் மூச்சில்

என்றும்

இரண்டே வார்த்தை

அம்மா அப்பா

அவர்களுகென்று ஒரு இடம்

நான் பெற்றவர்களுக்கு கூட

ஈடக்காத இடம்

என்னில் என்றும்

என்னை பெற்றவர்களுக்காக