Saturday, September 20, 2008

சத்திய வாக்கு

நாம் கொண்ட நேசம்
உண்மை என்றாள்
நீயாக வருவாய்
எனை தேடி அல்ல
நம் நேசம் தேடி

ஏக்கம்


கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடையே

ஒரு போராட்டம்

நம் மீது கொண்ட நம்பிக்கை

நம்மை பிடிதவரிடையே காணாமல் போகும்போது

சிரிப்பு


வாக்கு எடுப்பின் போது

கொடுக்கப்படும் உரிமை

வாக்களிப்பின் போது

பரிபோவது தான் வேடிக்கை

சுழற்சி


என் வாழ்க்கை சுலர்ர்ச்சி

கவிதைகள் - நான்

காவியங்கள் - நான் எழுதாத கண்ணீர் காவியம்

கதைகள் - என் வாழ்க்கை

கற்பனைகள் - என் எண்ணம்

கலர்ரைகள் - என் முடிவு

ரசனை


என் தமிழ் கவிக்கு ரசிகையாய்

இருந்தவள் நீ

உன் ஆங்கில கவிக்கு

என்னை ரசிகை ஆக்கிவிட்டாயே

மறுபிறப்பு


முதல் குழந்தயெய் பறிகொடுத்து

இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல

என் முதர்கவிதைகளை பலி கொடுத்து

என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்

அழகு


அழகாய் இல்லாத போதும்


சோதனைகளையும் சாதனையாகும் மனம்

அழகாய் மாறிய பின்

நான் ரசித்த முகங்கள்

என்னை ரசித்த முகங்கள்

இல்லாத இவேளையில்

மனச்சாட்சி சிரிக்கிறது

அழகு இருந்து என்ன பயன்

உண்மை


கடவுளுக்கும் உரிமை இல்லை

காதலரை பிரிக்க

மனிதனுக்கு மனமும் இல்லை

உறவுகளை மதிக்க

வாலிபணின் காதலி ஊர் சுற்றும் வரை

உண்மை காதலிக்கு அவள் காதல் உயிர் உள்ள வரை

அழகி


நிலா இல்லாத வானம்

அழகிலைதான்

நீர் இல்லாத கடலும்

அழகிலைதான்

அதெப்படி

நீ இல்லாமல் இன்றும்

நம் காதல்இன்னும் பேரழகாய்