உன் அழகில் மயங்கிய
உயிர்கள் எத்தனை
காதல் கோர்வைகளை பேசி
உன்பேர் சொல்லி சிரிக்கும் தம்பதிகள்
நிறைமாத கர்பிணி தலைகோதி
உன்னை ரசிக்க சொல்லும் கணவன்
உன்னை கட்டிபிடிக்க என்னும்
குழந்தைகள்
உன்னை முத்தமிட துடிக்கும்
பருவ மங்கைகள்
உன் கைகோர்க்க விரைந்து
பறக்கும் இளங்காளையர்கள்
இந்த வரிசையில் இதோ நானும்
யார் நீ எனக்கு??
என் கன்னத்தில் முத்தமிட்ட தோழியா??
என் கண்ணீர் மறைத்த தோழனா??
உண்மை உணர்த்திய உறவா??
உன்னை எப்படி அழைக்க
அழகிய மலையின் மழைத்துளியே