Tuesday, December 2, 2008

அருமை தோழர் தோழிகளுக்கு

அனைவரும் என்னிடம் கேட்டுகொண்டதுபோல் நா போடுருக்ற கோலத்துக்கு எத்தன புள்ளிங்க்ரத இந்த ஹெடிங்கு கீழ் எழுதறேன் ஓகே வா எப்பா பொண்ணுங்க தான் கேப்பாங்கன்னு பார்த்தா பசங்களும் கேட்டு பின் னிடீங்க போன் ல காதுல ரத்தம் வந்ததுதான் மிச்சம் அடுத்து என்ன அடிக்ரதுகுள்ள கண்டிப்பா கீழ சொலிட்றேன்பா

ரங்கோலி :

  1. நிஜம்
  2. ஏமாற்றம்
  3. இன்றைய கோவலன்
  4. ராமா
  5. இவைகள் நண்பர் தருண்னுக்காக (ஸ்பெஷல்)
  6. காதலன்
  7. படிப்பு
  8. நிறம்
  9. சத்திய வாக்கு
  10. கற்பனை
  11. உண்மை

புள்ளி கோலம் :

  1. சீதை : 21 - 11 idukku புள்ளி
  2. நேர்காணல் : 19 - 11 idukku புள்ளி
  3. கண்திறந்த கனவு : 15 -8 iddukku புள்ளி
  4. ஏக்கம் : 13 -7 idukku புள்ளி
  5. சிரிப்பு : 17 புள்ளி munnu வரிசை 3 வரை நேர் புள்ளி
  6. சுழற்சி : 15 -1 நேர் புள்ளி
  7. ரசனை : 15 -1 idukku pulli
  8. மறுபிறப்பு: 15 -8 iddukku புள்ளி
  9. அழகு : 15 -8 iddukku புள்ளி
  10. அழகி : 13 -7 iddukku புள்ளி

Friday, November 21, 2008

நிஜம்


பார்த்து பழகிய நாட்களிலிருந்து

இர்பில் இருந்து வந்த உன் காதல்

எனை தொட ஒரு வினா விசும்பல்

நீ நல்லவனா கெட்டவனா என்று?

என்னெனில்

காதலில் எதுவும் இனிக்கும்

ஆனால் கைபிடிகைஇல்

வாழ்க்கை மட்டும்அல்ல

என் வார்த்தையும் கசக்கும்

ஏமாற்றம்

உணர்ச்சி அற்றவள் என்று என்னை ஏளனம் செய்கிறாய்

கணவனாய் மாறிய பின் அழித்து விடுவாயோ

என் உணர்வுகளை என நான் பயப்பட

காதலனாய் இருக்கும் போழுதே

கிழித்து விட்டாய் என் இதயஇத்தாய்

இனி எப்படி உணர்வுகள் வரும்

Thursday, November 20, 2008

இன்றைய கோவலன்


கோபத்தில் நானும் கண்ணகி தான்

உன்னை என்னிடம்இருந்து யார் பிரிதிருந்தாலும்

எரித்திருப்பேன் ஆனால்

என் கோவலனே

நீ ஏன் பிரிந்து சென்றாய்

மாதவியேய் தேடி

ராமா


நீ ராமன் இல்லை
ஆனால் உனக்காய்
தனியே வனவாசமிருக்கும்

நான் நிச்சயம் சீதை தான்

இவைகள் நண்பர் தருண்னுக்காக (ஸ்பெஷல்)


கல்வெட்டு கை எழுத்தின் கலக்கல் மாணவன்

லிலைகள் புர்யும் சுவடுகள் இல்லை உன்னிடம்

படிப்பில் பட்டம் எப்படியோ?

ஆனால் மங்கையர் உள்ளத்தில் மன்மத பட்டம்

இன்றைய புதிதில் புதிராய் நே எனக்கு

ஆனால் உன் வீர விளையாட்டுக்கு

என்றுமே ரசிகை நான் உனக்கு

Tuesday, November 18, 2008

காதலன்


ஐந்து நிமிடம் என்னை

உற்று பார்க்கும் ஆண்கள் கூட

என்னை தவறாய் நோட்டமிட கத்திருகைஇல்

என் மீது அசை இருந்தும்

உன்மீது என நேசம் இருந்ததும்

என்னை கலங்க படுத்தாத

உன் கண்கள்

தவறாய் தொட துடிக்காத

உன் கைகள்

கள்ளம் கபடம் இல்லாத

உன் மனம் இவற்றை நேசித்தேன்

உன்னை காதலன் என எண்ணி

கணவன்னை வருவாய் என

காத்திருக்கிறேன் என் தவத்துக்கு

உரிட்ட பெயர் பயிதியக்கரி


படிப்பு


ஆசையாய் படிக்க கிடைத்தது

முதுகலை பொறிஇயல் பட்டம்

பெண்ணாய் வாழ்க்கையில்

பல தடை தாண்டி வந்தபின்
கிடைத்தது படிதாண்டா

பத்தினி பட்டம்

பகுத்தறிவு இல்லா மனிதரிடையே

வாழும் பொது இந்த

பட்டங்களால் என்ன பயன்?

கற்பனை


கற்பனை கணவனை

எதிர்பார்த்து கத்திருகைஇல் தெரிந்தது

வானவில் கோலத்தை விட

மணபெண்களின் நானா கோலம் அழகுதானே

சீதை


இந்த கலியுகத்தில்


ராமனை தேடும்

சீதைகளின் பெயர்

முதிர்கன்னி


Monday, November 17, 2008

நேர்காணல்


என் திறமைகளை இன்று

யார் பாராட்டும் போதும்

நினைவில் வரும்

மேற்கத்திய ஆங்கில

உச்சரிப்பு இல்லாத உதடுகளால்

நிராகரிக்கப்பட்ட நேர்காணல் தேர்வு

Saturday, November 15, 2008

வேலை

குருவாய் இருந்த எனக்கு

இன்று மாணவர்களே குழந்தை

என் பணியை

கதளிதளிததல் கிடைத்த குழந்தைகள்

படைத்தவனுக்கு நன்றி

பணியில் எனக்கு தாய்மை

பட்டம் அளித்ததற்கு

Sunday, November 2, 2008

தொடர் கதை 1

சிங்கார சென்னை:

எலரையும் வாழ வெச்ச சென்னை எனையும் வாழவெய் பத்தி தெரிஞ்சுக்க குபிட்டது. உயர் படிப்புக்குஆன ப்ராஜெக்ட் செய்றதுக்காக சென்னைகு வந்தேன். முதன் முதல அதுக்காக நான் இங்க தங்கின இடம் தி .நகர் தான். இந்த கம்பெனி ல ப்ராஜெக்ட் கெடைக்காதஆ அந்த கம்பெனில கெடைக்காதா தேடி தேடி அப்பா காசு கரைஞ்சாது தன் மிச்சம். தெரு தெருவா வேலை தேட அலைவேனு பார்த்த ப்ராஜெக்ட்கே அலைஞ்சேன். ஒரு வாரம் அலைஞ்சு திருஞ்சு பெண்டா சொபிட்ல ப்ராஜெக்ட் பண்ண பெர்மிச்சின் வாங்கினேன். ரெண்டு நாள் தங்கிட்டு போய்டேன் உருக்கே திரும்ப ,சென்னை வாழ்க்கை எனக்கு கொஞ்சம் செட் ஆகல அப்ப. மறுபடி வந்து கூட படிச்ச பத்மா,காயத்ரி,ஜீவாவோட கோடம்பாக்கம்ல தங்கினேன். நாங்க தங்கி இருந்த எடம் மேத்தாநகர் பல பேருக்கு ரொம்ப தெரிஞ்ச எடம் தான். போர் அடிச்சா ஸ்டேஷன் வர ஒரு வாக் நடந்தே வருவேன் காச செலவு பண்ண கொஞ்சம் இந்த உருள கஞ்சமா தானே இருக்க வேண்டி இருக்கு. அங்க தங்கி இருந்தப்ப எனக்கு மறக்க முடியாத எடம் சம்பவம்நா அமிஞ்சிகரைல போட்டோ பிரிண்ட் பண்ண நடந்தே போனேன். நா கொஞ்சம் நடக்கிற விஷயத்துல சோம்பேறி ஓட சொன்ன விருட்டுனு ஓடிருவேன் ஆனா அதே நடக்கணும்னா அழுகை தான் மிச்சம். இதைவிட கொடுமை அமிஞ்சிகரையாவது பக்கம் அண்ணா நகர் ரௌன்டனம் வர நடந்தே போனேன் இந்தியன் பேங்க் தேடி எவன கேட்டாலும் இங்க தான் இருக்கு இங்க தான் இருக்குனு சோலியே நாலு கிலோமீட்டர் வர நடக்க வேசுடனுங்க பாவிங்க அனைகி விட்டேன் இந்த உருள எவன்கிடயும் அட்ரஸ்கு எப்டி நடந்து போகணும் நு கேக்ரத. இனிக்கி வர அட்ரஸ் பத்தி kekka naa கூப்டற நம்பர் இதாங்க(ரெண்டு நாலு நாலு நாலு நாலு நாலு நாலு நாலு நாலு) இது சென்னை கிச்டோமேர் கேர் நம்பர் என்ன தேடல் வேணா இங்க கேக்கலாம்...................... நெஞ்களும் எனிமேல் உஸ் பன்னுங்க ஓகே
(தொடரும்)

உன் நினைவு

உணவில் உப்பும் காரமும்

கசந்து போக

சூஉடும் மல்லிகையில்

மனமும் மறந்து போக

நினைவில் என்றும்

உருவமில்லா நிலையில்

நீ மட்டும்

நிறம்


நிறமற்ற வானவில்லாய்


என் வாழ்க்கை பயணம்


நீ இல்லாமல்


கண்திறந்த கனவு


அவசரமாய் கண் விழித்து

நொடிகளை கணக்கிட்டு

ஒரு குளியல்

வரிசையில் நின்று

உணவினை உட்கொண்டு

பறந்து வந்து ஒரு

விரைவு ரயில் பயணம்

வேலைகள் ஆரம்பம் அக

ஒரு மணி நேர இடைவேளை

அந்த ஒரு மணி நேரத்தில்

விழிகள் முடாமல்

நிசப்தத்தின் இடையே

அழகாய் ஒரு மனக்கனவு

என் திருமண கனவு

அதில் என் தேடல்

உன்னை பற்றி

Saturday, September 20, 2008

சத்திய வாக்கு

நாம் கொண்ட நேசம்
உண்மை என்றாள்
நீயாக வருவாய்
எனை தேடி அல்ல
நம் நேசம் தேடி

ஏக்கம்


கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடையே

ஒரு போராட்டம்

நம் மீது கொண்ட நம்பிக்கை

நம்மை பிடிதவரிடையே காணாமல் போகும்போது

சிரிப்பு


வாக்கு எடுப்பின் போது

கொடுக்கப்படும் உரிமை

வாக்களிப்பின் போது

பரிபோவது தான் வேடிக்கை

சுழற்சி


என் வாழ்க்கை சுலர்ர்ச்சி

கவிதைகள் - நான்

காவியங்கள் - நான் எழுதாத கண்ணீர் காவியம்

கதைகள் - என் வாழ்க்கை

கற்பனைகள் - என் எண்ணம்

கலர்ரைகள் - என் முடிவு

ரசனை


என் தமிழ் கவிக்கு ரசிகையாய்

இருந்தவள் நீ

உன் ஆங்கில கவிக்கு

என்னை ரசிகை ஆக்கிவிட்டாயே

மறுபிறப்பு


முதல் குழந்தயெய் பறிகொடுத்து

இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல

என் முதர்கவிதைகளை பலி கொடுத்து

என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்

அழகு


அழகாய் இல்லாத போதும்


சோதனைகளையும் சாதனையாகும் மனம்

அழகாய் மாறிய பின்

நான் ரசித்த முகங்கள்

என்னை ரசித்த முகங்கள்

இல்லாத இவேளையில்

மனச்சாட்சி சிரிக்கிறது

அழகு இருந்து என்ன பயன்

உண்மை


கடவுளுக்கும் உரிமை இல்லை

காதலரை பிரிக்க

மனிதனுக்கு மனமும் இல்லை

உறவுகளை மதிக்க

வாலிபணின் காதலி ஊர் சுற்றும் வரை

உண்மை காதலிக்கு அவள் காதல் உயிர் உள்ள வரை

அழகி


நிலா இல்லாத வானம்

அழகிலைதான்

நீர் இல்லாத கடலும்

அழகிலைதான்

அதெப்படி

நீ இல்லாமல் இன்றும்

நம் காதல்இன்னும் பேரழகாய்